Enable Javscript for better performance
சாயாமலையில் காற்றாலை அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    சாயாமலையில் காற்றாலை அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

    By DIN  |   Published on : 09th February 2018 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், சாயாமலைப் பகுதியில் தனியார் காற்றாலை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
    இதுதொடர்பாக சாயாமலை, ராமலிங்கம்பட்டி கிராம மக்கள், ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களின் வாழ்வாதாரம் விவசாயமும், கால்நடைகளும்தான். எங்கள் பகுதியில் சாயாமலை கண்மாய் மூலமே விவசாயம் நடைபெறுகிறது. அதை நம்பியே கால்நடைகளும் உள்ளன. இந்த கண்மாய் மூலமே விவசாய கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். 
    இந்த கண்மாய்ப் பகுதி, கண்மாய்க்கு நீர் வரும் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மரங்களை அழித்து  தனியார் காற்றாலை நிறுவனத்தினர் காற்றாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எங்களின் கண்மாய்ப் பகுதியை ஆக்கிரமிக்க ஆயத்தமாகி வருகிறார்கள். காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை எங்கள் கண்மாய் வழியாக கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எங்களுக்கும், எங்களின் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் தனியார் காற்றாலையை நிறுவ அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai