Enable Javscript for better performance
செங்கோட்டையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கோட்டையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கோட்டையில் மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தென்காசி கிளைச் செயலர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சூசை மரிய அந்தோணி பேசினார்.
    ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையில்  செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கடந்த 15 நாள்களாக இணையதள சேவை பாதிப்பு காரணமாக செங்கோட்டை, புளியரை, வடகரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. 
    இதனால் சந்தாதாரர்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாகக் கூறி தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இன்னும் ஓரிரு தினங்களுக்குள் இந்த குறைகள் சீரமைக்கப்படாவிட்டால், மாவட்ட தலைமை அலுவலகம் முன்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் பிஎஸ்என்எல் ஊழியர்  சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai