Enable Javscript for better performance
தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி சந்திப்பில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    அரசாணை 129இன்படி மக்கள் தொகைக்கு ஏற்ப 2013ஆம் ஆண்டிலிருந்து பணியமர்த்தப்பட்ட 16,726 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் 2008 முதல் 2012 வரையிலான காலத்தில் 12,526 கிராம ஊராட்சிகளில் பணியமர்த்தப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு நிலுவைத் தொகையுடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை கருவூலத்திலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், துப்புரவு தொழிலாளர் நலவாரியம் உடனடியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ஒரு முறை இலவச முழு உடல்பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பரமசிவம், மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai