Enable Javscript for better performance
நெல்லையப்பர் கோயிலில் அர்ச்சகர்கள்,  ஊழியர்களுக்கு மனிதநேயப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நெல்லையப்பர் கோயிலில் அர்ச்சகர்கள்,  ஊழியர்களுக்கு மனிதநேயப் பயிற்சி

    By DIN  |   Published on : 09th February 2018 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்ட கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மனிதநேயப் பயிற்சி திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயிலில் நடைபெற்றது.
    காலை 10.30 மணிமுதல் 12.30 மணி வரை கோயில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மனவளக்கலை பேராசிரியர் கற்பகவிநாயகம் பயிற்சி அளித்தார். இதில் சுமார் 70 பேர் கலந்துகொண்டனர். 
    பிற்பகல் 1.30 மணி முதல் 4 மணி வரை அர்ச்சகர்களுக்கு மனவளக்கலை பேராசிரியர் சக்திஈஸ்வரன் மனிதநேயப் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியின்போது கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கனிவாக நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல் தியான பயிற்சியும் அளிக்கப்பட்டது. 
    இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சாத்தையா, கண்காணிப்பாளர் ரவீந்திரன், கோயில் செயல் அலுவலர் ரோஷினி, ஆய்வாளர் (திருநெல்வேலி மேற்கு) முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai