Enable Javscript for better performance
பாளை.யில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள ஜவாஹர் திடலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பாஜக தலைமையிலான மத்திய அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைக் கண்டிப்பது, சிறு-குறு தொழிலாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
    ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ பீடி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம். வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர்கள் எம். மணிகண்டன், எஸ்.கே. செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பெருமாள் தொடக்கவுரையாற்றினார். சிஐடியூ மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ. ஆரியமுல்லை, ஆர். முருகன், பீர்முகம்மதுஷா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். எம். சுடலைராஜ் நிறைவுரையாற்றினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai