Enable Javscript for better performance
மாநில ரோபோடிக்ஸ் போட்டி: தென்காசி பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான ரோபோடிக்ஸ் போட்டியில் தென்காசி எம்.கே.வி.கந்தசாமிநாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியினர் இரண்டாமிடம் பெற்றனர்.
    நெக்ஸ் எஜூகேசன் அமைப்பு சார்பில் கோயம்புத்தூர் விவேகா வித்யாலயாவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ரோபோடிக்ஸ் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். தென்காசி எம்.கே.வி. கந்தசாமிநாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 12 மாணவர்கள் நான்கு குழுக்களாக கலந்துகொண்டு போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் ரொக்கமும், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
    வெற்றிபெற்ற மாணவர்களை தாளாளர் பாலமுருகன், முதல்வர் அந்தோணிபால்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai