கடையம் அருகே 2 மாதக் குழந்தை கொலை: தாய் கைது
By DIN | Published on : 15th February 2018 09:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடையம் அருகே பிறந்து 2 மாதங்களே ஆன ஆண் குழந்தையை நீரில் முழ்கச் செய்து கொலை செய்ததாக, அவரது தாயை கடையம் போலீஸார் கைது செய்தனர்.
கடையம் அருகே வெய்க்காலிப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சாத்தாக் குட்டி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தம்பதிக்கு கடந்த டிச. 7ஆம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்ததாம். அந்தக் குழந்தை தன்னைப் போல் இல்லையென்று கூறி சாத்தாக்குட்டி தனது மனைவி லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்நிலையில் லட்சுமி புதன்கிழமை மாலை பிறந்து 2 மாதங்களான தனது ஆண் குழந்தையை வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டில் மூழ்கச் செய்து கொலை செய்தாராம். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அருணாசலத்திடம் சென்று, தான் தனது குழந்தையைக் கொன்று விட்டதாகக் கூறியதையடுத்து அவர் கடையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, லட்சுமியை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.