சுந்தரனார் பல்கலை.யில் விதிமீறல்:  துணைவேந்தர் மீது மூட்டா குற்றச்சாட்டு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் விதிமீறல் தொடர்பாக தமிழக அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மூட்டா வலியுறுத்தியுள்ளது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் விதிமீறல் தொடர்பாக தமிழக அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மூட்டா வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மூட்டா பொதுச்செயலர் நாகராஜன், தலைவர் எஸ்.சுப்பாராஜு உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: "மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக விதிகளின்படி ஆண்டுக்கு இருமுறை ஆட்சிப்பேரவை (செனட்) கூட்டம் நடத்த வேண்டும். ஆண்டின் 2ஆவது கூட்டத்தில் வருடாந்திர அறிக்கையை பேரவைமுன் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக ஆட்சிப் பேரவைக் கூட்டம் நடத்தாமலேயே துணைவேந்தர் முடிவுகளை எடுத்துள்ளார். இதுதவிர அண்மையில் நடைபெற்ற ஆட்சிப்பேரவைக் கூட்டத்துக்கு சுமார் 45 உறுப்பினர்களை அழைக்கவில்லை. 
ஆசிரியர் நியமனம், கல்லூரிகளுக்கு புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல் போன்றவற்றிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதற்கு ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் முறையாக பதில் அளிக்காததோடு,  மூட்டா உறுப்பினர்களை கூட்டத்தில் பேச விடாமல் தடுத்தது ஜனநாயக மரபுகளை மீறும் செயலாகும். 
எனவே,  இப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள விதிமீறல்கள் குறித்து தமிழக அரசும்,  ஆளுநரும்,  பல்கலைக்கழக மானியக்குழுவும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com