Enable Javscript for better performance
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவுநாளையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருநெல்வேலி நகரத்தில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.
    இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். பெரும் முதலாளிகளிடம் வளங்கள் குவிவதைத் தடுத்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் அரசு புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். வேலையின்மை, வறுமையை முற்றிலும் நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் பேரணியில் வலியுறுத்தப்பட்டன. பேரணிக்கு மாவட்டத் தலைவர் மேனகா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பா.ராஜகுரு, மாவட்ட துணைச் செயலர்கள் வை.ராஜேஷ், முகம்மது பயாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் ரெஜிஸ்குமார் தொடங்கிவைத்தார். நிர்வாகிகள் பிரபாகர், கருணா, அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    திருநெல்வேலி நகரம் அலங்கார வளைவு அருகே தொடங்கிய பேரணி பாரதியார் தெரு வழியாக திருநெல்வேலி வாகையடிமுனையை அடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் கைலாஷ், ரஞ்சித், மகேந்திரன், ரஜினி, மூர்த்தி உள்பட பலர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், நிர்வாகிகள் சுடலைராஜ், மல்லிகா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai