Enable Javscript for better performance
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஓடும் பேருந்தில் தனியார் வங்கி ஊழியரிடம் சங்கிலியைப் பறித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
    விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டை யைச் சேர்ந்த சௌந்திரபாண்டியன் மகள் அர்ச்சனா(22). இவர், திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை பணி முடித்து தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக சந்திப்பில் இருந்து புதிய பேருந்துநிலையத்துக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தாராம். புதிய பேருந்து நிலைய வாயில் அருகே பேருந்து சென்றபோது, அவரது அருகிலிருந்த இளைஞர் அர்ச்சனா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துகொண்டு ஓடும் பேருந்தில் இருந்து குதித்தாராம். அர்ச்சனா கூச்சலிடவே, கீழே நின்றுகொண்டிருந்தவர்கள் அந்த இளைஞரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
    போலீஸார் அந்த இளைஞரிடம் விசாரித்ததில், மதுரையைச் சேர்ந்த மாரீஸ்வரன் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து பாளையங்கோட்டை குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, அந்த இளைஞரை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai