Enable Javscript for better performance
கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட இக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு திருமஞ்சனம், வழிபாடுகள் நடைபெற்றன. சிம்ம வாகனம், அன்னவாகனம், தோளுக்கினியன், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திரபிரபை , கருட வாகனம், இந்திர வாகனம், வெள்ளை யானை வாகனங்களில் சுவாமி திருவீதியுலா வந்தார்.
    விழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் கரியமாணிக்கப்பெருமாள் மலர் அலங்காரத்துடன் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா, கோபாலா முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    சனிக்கிழமை (மார்ச் 24) முற்பகல் 11 மணிக்கு தாமிரவருணி நதியில் தீர்த்தவாரியும், மாலை 5 மணிக்கு பல்லக்கு திருவீதியுலாவும் நடைபெற உள்ளன. ராமநவமி நாளான இம் மாதம் 25 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஸ்ரீ ராமர் திருமஞ்சனம், இரவு 7.30 மணிக்கு ஸ்ரீஆஞ்சநேயர் வாகனம் திருவீதியுலா நடைபெற உள்ளது. இம் மாதம் 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் திருவிழா நடைபெற உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai