Enable Javscript for better performance
நெல்லையில் விபத்து: இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
    உவரியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவர், தனது காரில் திருநெல்வேலிக்கு வந்துவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். அரசு பொறியியல் கல்லூரி அருகே ரெட்டியார்பட்டி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரும், நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் மோதின. இந்த விபத்தில் ராஜ்குமார், அவ் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த திருநெல்வேலி குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (25) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
    இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஹரிஹரன் உயிரிழந்தார். ராஜ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai