Enable Javscript for better performance
மானூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மானூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    மானூர் அருகேயுள்ள மேலப்பிள்ளையார்குளம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணி மனைவி கருப்பம்மாள் (55). இவர், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் வயலில் அறுவடைப் பணிக்காக வெள்ளிக்கிழமை சென்றிருந்தாராம். அப்போது வயலில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை தவறுதலாக கருப்பம்மாள் பிடித்ததால் மின்சாரம் பாய்ந்ததாம். அப் பகுதியில் நின்றவர்கள் மின்சாரத்தை தடை செய்துவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கருப்பம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் மானூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai