Enable Javscript for better performance
ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

    By DIN  |   Published on : 24th March 2018 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பின்பு கொடியேற்றப்பட்டது. மாலையில் தோளுக்கினியனில் சுவாமி எழுந்தருளினார்.
    சனிக்கிழமை (மார்ச் 24) சிம்ம வாகனத்திலும், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) அனுமந் வாகனத்திலும் சுவாமி எழுந்தருள்கிறார். இம் மாதம் 27 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.
    விழாவின் சிகர நிகழ்வாக ஏப். 1 ஆம் தேதி காலை 7 மணிக்கு பெருமாள் தேருக்கு எழுந்தருள்கிறார். காலை 8 மணிக்கு தேரோட்டமும், ஏப். 2 ஆம் தேதி காலை 7 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 8.30 மணிக்கு சப்தாவரண வீதியுலாவும் நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai