Enable Javscript for better performance
கல்லூரி மாணவர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து ஆட்சியர் வீட்டின் முன் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து ஆட்சியர் வீட்டின் முன் சாலை மறியல்

    By DIN  |   Published on : 31st March 2018 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி அருகே தனியார் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் திருநெல்வேலி ஆட்சியர் வீட்டின் முன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஈரோட்டைச் சேர்ந்த பாலமுருகன் மகன் மனோஜஸ்பிரபாகர் (20). இவர், திருநெல்வேலி அருகே மேலத்திடியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில், அவரது அறையில் தூக்கிட்ட நிலையில் வியாழக்கிழமை சடலமாகக் கிடந்தாராம். முன்னீர்பள்ளம் போலீஸார் அங்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    இந்நிலையில், அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வெள்ளிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மேட்டுத்திடல் பிரதான சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
    இதுகுறித்து மாணவரின் உறவினர்கள் கூறுகையில், கல்லூரியில் அதிக அபராதம் விதிப்பது உள்ளிட்டவற்றால்தான் மாணவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. மேலும், இதுகுறித்து பெற்றோர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.1.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai