Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: நெல்லையில் கருப்பு கொடியேற்றி பாமக போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: நெல்லையில் கருப்பு கொடியேற்றி பாமக போராட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினர் பாளையங்கோட்டையில் வீடுகளில் கருப்பு கொடியேற்றும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான வழக்கு தொடர்பாக அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மார்ச் 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது. 
    ஆனால், அதன்படி மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வீடுகளில் கருப்பு கொடியேற்றும் போராட்டம் நடத்தப்படும் என பாமக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பாளையங்கோட்டை கோட்டூர் சாலையில் உள்ள வீடுகளில் கருப்பு கொடியேற்றப்பட்டது. 
    கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் ஆர். அன்பழகன், மாநகர் மாவட்டத் தலைவர் சியோன் தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில இளைஞரணி துணைச் செயலர் செல்வின் சுரேஷ், மாவட்ட அமைப்புச் செயலர் முத்துசரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி நீரை வழங்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, திருநெல்வேலியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai