Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆசிரியர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆசிரியர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 31st March 2018 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்களிக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் பி.ராஜ்குமார், மாவட்டச் செயலர் செ.பால்ராஜ் உள்ளிட்டோர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரை சந்தித்து அளித்த மனு: இம் மாவட்டத்தில் சேரன்மகாதேவி, தென்காசி, திருநெல்வேலி கல்வி மாவட்டங்களின் கீழ் 15 ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றிய பகுதி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்படுகிறது. இச் சங்கங்களுக்கு இம்மாதம் 2, 7, 16, 23 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 
    இந்த நாள்களில் ஆசிரியர்கள் வாக்களிக்க ஏதுவாக சுழற்சி முறையில் 2 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். இயக்குநர்களாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டும் அன்றைய தினம் முழுநேரமும் அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai