Enable Javscript for better performance
சாராள் தக்கர் கல்லூரிபொருளியல் துறை வைரவிழா- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டையில் சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் பொருளியல் துறையின் வைரவிழா நடைபெற்றது.
    இவ்விழாவுக்கு கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவர் ஜெஸிக்கா செல்வின் தலைமை வகித்தார். கல்லூரித் தாளாளர் சாம்ஷன் பால்ராஜ், முதல்வர் உஷாகாட்வின், துணை முதல்வர் ஜெபமலர்மணிமாலாஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
    இதையொட்டி, பொருளாதாரத்தில் பெண் சுதந்திரம் எனும் தலைப்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் திரையிடப்பட்டன. முன்னாள் மாணவிகள் தங்களின் கல்லூரி நாள்கள் குறித்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். வைரவிழா மலரை துறைத் தலைவர் ஜெ. நிர்மலா வெளியிட்டார். மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    துறைத் தலைவர் வரவேற்றார். பேராசிரியை ஜோஸ்பின் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai