Enable Javscript for better performance
நெல்லை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சாவு

    By DIN  |   Published on : 31st March 2018 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி அருகே பெண்ணிடம் நகைப்பறித்த வழக்கில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் வெள்ளிக்கிழமை இறந்தார். 
    திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கோடாரங்குளத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் முருகேசன் (26). இவர் கடந்த 2017இல் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்தவரிடம் தகராறு செய்ததாக விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு முருகேசன் கோடாரங்குளத்துக்கு செல்லாமல் மருதூரிலுள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
    இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் பெண்ணிடம்  நகையைப் பறித்ததாக முருகேசன், நடுவக்குறிச்சியைச் சேர்ந்த பட்டுராஜா மகன் மாணிக்கராஜா என்ற ராஜா (24) ஆகிய இருவரையும் தனிப்பிரிவு போலீஸார் விசாரணைக்காக சிவந்திபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனராம். 
    இந்நிலையில்,  இரண்டு இளைஞர்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக  திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில்,  முருகேசன் வெள்ளிக்கிழமை மாலை இறந்தார்.  மாணிக்கராஜா என்ற ராஜா தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். 
    இதனிடையே, இவர்களிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கியதாக மானூர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பா மனைவி கண்ணம்மா (44) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது: சீவலப்பேரி சாலையில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் காயமடைந்த முருகேசன், மாணிக்கராஜா இருவரும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முருகேசன் இறந்து விட்டதாகத்  தெரிவிக்கப்பட்டது. மாணிக்கராஜாவின் தந்தை பட்டுராஜா  கூறியது: 5 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த எனது மகன் மாணிக்கராஜாவை தனிப்படை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 
    பின்னர், மாணிக்கராஜாவை சிறையில் அடைக்கப்போவதாக தெரிவித்து போலீஸார் என்னிடம் கையெழுத்து வாங்கினர். என் மகனுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேசன் இறந்து விட்ட செய்தியை அறிந்து மகனை பார்க்க வந்தேன் என்றார் அவர். இறந்த முருகேசனின் மனைவி சங்கரி (20) ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai