Enable Javscript for better performance
நெல்லை ஆற்றில் மூழ்கி தூத்துக்குடி இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி, இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    தூத்துக்குடி கோரம்பள்ளம் மாதவன்நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஆனந்தகுமார் (28). இவர், பங்குனி உத்திரத்தையொட்டி குடும்பத்தினருடன் திருநெல்வேலி தச்சநல்லூரை அடுத்த சேந்திமங்கலம் குலதெய்வ கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தார்.
    அப்போது, அங்குள்ள தாமிரவருணி ஆற்றில் குளித்த அவர், ஆழமான பகுதிக்குச் சென்றதில், எதிர்பாராமல் தண்ணீரில் மூழ்கினாராம். குடும்பத்தினர் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, தச்சநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai