Enable Javscript for better performance
புனித வெள்ளி: தேவாலயங்களில் பிரார்த்தனை- Dinamani

சுடச்சுட

    

    புனித வெள்ளியையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
    இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும் மரணத்தை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனர். தவக்காலத்தின் முக்கிய நிகழ்ச்சியான இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த புனித வெள்ளி தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
    இதையொட்டி, திருநெல்வேலி நகரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. தென்னிந்திய திருச்சபை தேவாலயங்களில் முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மும்மணி ஆராதனை என்ற பெயரில் பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் உபவாசத்துடன் பங்கேற்றனர்.
    கத்தோலிக்க தேவாலயங்களில் மாலையில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் சார்பில், மறைமாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் தலைமையில் சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 
    இயேசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில், ஈஸ்டர் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 1) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சனிக்கிழமை (மார்ச் 31) இரவு 11.30 மணிக்கு தூய சவேரியார் பேராலயத்தில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஆ. ஜூடுபால்ராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai