Enable Javscript for better performance
புளியங்குடியில் பங்குனித் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புளியங்குடி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. 10ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
    தொழிலதிபர் சங்கரநாரயணன், புளியங்குடி காவல் ஆய்வாளர் ஆடிவேல், கோயில் நிர்வாக அதிகாரி அ.ர.ஸ்ரீதேவி ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் தெற்கு ரத வீதி, கோயில் மேலவாசல் தெரு, வடக்கு ரத வீதி வழியாக  10.40-க்கு நிலையம் வந்தடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கிளாங்காடு ஜமதக்னீஸ்வரர் கோயிலில்...
    கடையநல்லூர்: கடையநல்லூர் அருகேயுள்ள கிளாங்காடு நலமங்கை அம்பாள் சமேத ஜமதக்னீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் நடைபெற்றது.
    இத்திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி, அம்பாள் ரதவீதி உலாவும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. 
    விழாவின் 9ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றன. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai