Enable Javscript for better performance
முத்துகிருஷ்ணாப்பேரியில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    சங்கரன்கோவில் மனோ கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் முத்துகிருஷ்ணாப்பேரியில் ஒரு வாரம் நடைபெற்றது.
    இம்முகாமை ஊர் பிரமுகர் எஸ்.எம். நாராயணன் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் மோனி தலைமை வகித்தார். இந்து நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் சாம்பீட்டர்அல்போன்ஸ், ஊர் நிர்வாகி ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் இலவச கண் பரிசோதனை முகாம், இலவச கால்நடை மருத்துவ முகாம், இலவச பொதுமருத்துவ முகாம், கருத்தரங்கு, மரக்கன்று நடுதல், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் ஆகியன நடைபெற்றன.
    பேராசிரியர்கள் கருப்பசாமி, குருநாதன், சிதம்பரம், பேராசிரியைகள் பரிதாபேகம், முத்துலட்சுமி, டாக்டர் அருள்மனோகரி, யுவராஜ் அகாதெமி ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி. கணேசன், பீஸ் டிரஸ்ட் திட்ட மேலாளர் விஜயராணி,  வழக்குரைஞர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.
    நிறைவு விழாவில் கிராமத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. திட்ட அலுவலர் ஜாபர்சாதிக் நன்றி கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai