Enable Javscript for better performance
யாதவர் பண்பாட்டுக் கழக கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மாவட்ட யாதவர் பண்பாட்டுக் கழக செயற்குழுக் கூட்டம் அண்மையில் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
    இக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ராமகிருஷ்ணன், வானமாமலை, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் ராமசாமி வரவேற்றார். பொருளாளர் பாபநாசம் அறிக்கை வாசித்தார். 
    2018 ஆம் ஆண்டில் சமச்சீர் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவது, இதற்காக மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழுடன் சண்முகசுந்தரம், 173, காவலர் குடியிருப்பு, சாந்திநகர், திருநெல்வேலி-2 என்ற முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கக் கோருவது, சங்கத்தின் 52 ஆவது ஆண்டு பரிசளிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai