Enable Javscript for better performance
வள்ளியூரில் நாளை பாஜக தொண்டர்கள் சந்திப்பு யாத்திரை- Dinamani

சுடச்சுட

    

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொண்டர்கள் சந்திப்பு யாத்திரை வள்ளியூர் ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 1) நடைபெறுகிறது.
    இதுகுறித்து, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவுத் தலைவர் எம்.எஸ். முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் இணைப் பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன், இத்தொகுதியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியப் பகுதியில் கட்சியினரை நேரடியாகச் சென்று சந்திக்கும் தொண்டர்கள் சந்திப்பு யாத்திரை நடைபெற உள்ளது.
    முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 1) வள்ளியூர் ஒன்றியத்திலுள்ள கண்ணநல்லூர், புதூர், கிழவநேரி, திருமலாபுரம், அழகப்பபுரம், கடம்பன்குளம், கும்பிளம்பாடு, தெற்கு கும்பிளம்பாடு, தெற்கு வேப்பிலாங்குளம், காவல்கிணறு, வடக்கன்குளம், சிவசுப்பிரமணியபுரம், கோலியான்குளம், ஊரல்வாய்மொழி, இருக்கன்துறை, புதுமனை, செட்டிகுளம், கண்ணன்குளம், மாடன் பிள்ளைகுளம், லெவிஞ்சிபுரம், விஸ்வநாதபுரம் ஆகிய 21 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai