Enable Javscript for better performance
"45 அஞ்சல் அலுவலகங்களில் விரைவில் ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவை'- Dinamani

சுடச்சுட

    

    "45 அஞ்சல் அலுவலகங்களில் விரைவில் ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவை'

    By DIN  |   Published on : 31st March 2018 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி கோட்டத்தில் 45 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர்.
    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய அஞ்சல் துறை மற்றும் யூஐடிஏஐ சார்பில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் அஞ்சல் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
    திருநெல்வேலி கோட்டத்தில் கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் திருநெல்வேலி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இந்தச் சேவை தொடங்கப்பட்டது. அதன்பின்பு சேரன்மகாதேவி அஞ்சலகத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 
    இக் கோட்டத்தில் மேலும் 45 அஞ்சல் அலுவலகங்களில் ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்தச் சேவையைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக ஆதார் பதிவு செய்பவர்களுக்கு கட்டணமின்றியும், திருத்தம் செய்பவர்களுக்கு ரூ.25 மற்றும் வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai