Enable Javscript for better performance
கம்பன் இலக்கியச் சங்க தொடர் சொற்பொழிவு- Dinamani

சுடச்சுட

    

    கம்பன் இலக்கியச் சங்கத்தின் 1132 ஆவது தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
    கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கு.சடகோபன் தலைமை வகித்தார். ராமன் இறைவாழ்த்துப் பாடினார். பி.சுந்தரம் வரவேற்றார். குகனோடும் ஐவரானோம் என்ற காட்சியை மு.கனகராசு பாடலாக விளக்கினார். சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியைக் கண்டனர் என்ற தலைப்பில் நெல்லை காவியனும், வேதங்கள் என்ற தலைப்பில் சங்கப் பொருளாளர் மு.அ.நசீரும் சொற்பொழிவாற்றினர். 
    ஆசிரியர் கோதைமாறன், ராதாகிருஷ்ணன், உமையொருபாகம், இரா.முருகன், முகம்மதுசலிம், நெல்லையப்பன், இரா.முருகன், நல்லாசிரியர் சு.செல்லப்பா, தொழிற்சங்கத் தலைவர் ஆவுடையப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொழிற்சங்கத் தலைவர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai