Enable Javscript for better performance
சங்கப் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி கூட்டுறவு சங்கத்தினர் மே 21முதல்ஒட்டுமொத்த விடுப்பு எடுக்க- Dinamani

சுடச்சுட

    

    சங்கப் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி கூட்டுறவு சங்கத்தினர் மே 21முதல் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்க முடிவு

    By DIN  |   Published on : 18th May 2018 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் நடவடிக்கைகளால் கூட்டுறவு சங்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால்,  வரும் 21-ஆம் தேதி முதல் அனைவரும் விடுப்பில் செல்வது என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். 
    இது தொடர்பாக,   மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் அவர்கள்  வியாழக்கிழமை அளித்த மனு:
    தேர்தல் நடவடிக்கைகளால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகம் முற்றிலும் முடங்கி உள்ளது. சங்கத்தின் பணியாளர்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் சங்கத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. 
    இது குறித்து ஏற்கெனவே நாங்கள் புகார் தெரிவித்திருந்தோம். ஆனால் இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை. இந்தப் பிரச்னையை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதேநிலை தொடர்ந்தால், சங்கப் பணியாளர்கள் அனைவரும் வரும் 21ஆம்தேதி முதல் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.
    முன்னதாக, பாளையங்கோட்டையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்க மாநில பொதுச் செயலர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai