Enable Javscript for better performance
நெல்லையில் மே 19முதல் 26 வரை திமுக அணிகளின் நிர்வாகிகள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லையில் மே 19முதல் 26 வரை திமுக அணிகளின் நிர்வாகிகள் கூட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிழக்கு மாவட்ட திமுக  அணிகளின் நிர்வாகிகள்  கூட்டம் திருநெல்வேலியில் இம் மாதம் 19 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
    திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலர் இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:  திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அனைத்து அணி  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர்  கட்சி அலுவலகத்தில் நடைபெறும். 
    மே 19இல் தொண்டர் அணி, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு அணி, 20இல் விவசாய அணி, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அணி, ஆதி திராவிட நலப்பிரிவு அணி, 21இல் இளைஞர் அணி, வர்த்தக அணி, நெசவாளர் அணி, 22இல் மருத்துவர் அணி, மீனவர் அணி, மாணவரணி, 25இல் விவசாய தொழிலாளர் அணி, பொறியாளர் அணி, மகளிர் தொண்டர் அணி, 26இல், வழக்குரைஞர் அணி, இலக்கிய அணி, மகளிர் அணி  கூட்டங்கள் மாலை 5 மணிக்கு நடைபெறும்.இதில் நிர்வாகிகள் தங்களின் பணிப் பதிவேடுகளுடன் பங்கேற்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai