Enable Javscript for better performance
பாளை. மண்டல அலுவலகத்தில் சிறப்பு முகாம்: 241 பேருக்கு ஆணை- Dinamani

சுடச்சுட

    

    பாளை. மண்டல அலுவலகத்தில் சிறப்பு முகாம்: 241 பேருக்கு ஆணை

    By DIN  |   Published on : 18th May 2018 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 241 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
    திருநெல்வேலி மாநகராட்சியில் தச்சநல்லூர், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் சொத்துவரி பெயர்மாற்றம், காலிமனை வரிவிதிப்பு, பாதாளசாக்கடை இணைப்பு அனுமதி, கட்டட வரைபட அனுமதி போன்ற கோப்புகளுக்கான ஆணைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, திருநெல்வேலி, தச்சநல்லூர், மேலப்பாளையம் மண்டல அலுவலகங்களில் முகாம் நடைபெற்றது.
    தொடர்ந்து, பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமை, மண்டல உதவி ஆணையர் எஸ்.அய்யப்பன் தொடங்கி வைத்தார். சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்த 25 பேர் உள்பட மொத்தம் 241 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
    செயற்பொறியாளர் (திட்டம்) என்.நாராயணன், துணை இயக்குநர் (மக்கள் தொடர்பு அலுவலர்) எஸ்.கண்ணதாசன், உதவி செயற்பொறியாளர் எல்.கே.பாஸ்கர், நிர்வாக அலுவலர் சங்கரி, சுகாதார அலுவலர் ஏ.சுப்பிரமணியன், கண்காணிப்பாளர் எஸ்.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai