Enable Javscript for better performance
மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    முதுநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தற்காலிக தீர்வாக நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு அனைத்து அரசு மருத்துவர்களும் பயனடையும் வகையில் உரிய சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும்; நிரந்தர தீர்வாக ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை வருகிற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்; நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஒருநபர் குழு மூலமாக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், நிர்வாக படி மற்றும் பிற ஊதியப் படிகளை வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில, மாவட்ட அளவில் உள்ள துறைரீதியான மருத்துவ அலுவலர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில கூடுதல் தலைவர் பி.அஷ்ரப்அலி தலைமை வகித்தார். திருநெல்வேலி மாவட்டத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் ஜஸ்டின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai