Enable Javscript for better performance
மாவட்ட மைய நூலகத்தில்கழிவுப் பொருள்களில் இருந்து கலைப்பொருள் தயாரிக்கும் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட மைய நூலகத்தில் கழிவுப் பொருள்களில் இருந்து கலைப்பொருள் தயாரிக்கும் பயிற்சி

    By DIN  |   Published on : 18th May 2018 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில், கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில், 10-ஆவது நாளான வியாழக்கிழமை கழிவுப் பொருள்களில் இருந்து கலைப்பொருள்களை உருவாக்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 
    பாளையங்கோட்டை கவின் ஆர்ட் ஆனந்த பெருமாள்,  ஐஸ் கிரீம் குச்சியில் சிறுசிறு ரோஜாக்களை இணைத்து சுவரில் மாட்டும் கலைப் பொருளாக மாற்றுவது, குளிர்பான பாட்டில்களை சிறுசிறு துண்டுகளாய் நறுக்கி கலைப் பொருள்களாக மாற்றுவது என பல்வேறு பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளித்தார். குழந்தைகள் ஆர்வத்துடன் அவற்றை கற்றுக்கொண்டனர்.  
    குழந்தைகளை பரவசப்படுத்த நாகரீக கோமாளியாக வந்து கதை சொன்னார் ஆசிரியர் சங்கர்ராம். வால் உள்ள கோமாளியை குழந்தைகள் ஆர்வத்துடன் பார்த்தனர். அவர், குழந்தைகளுக்கு கத்தரிக்காய் கதை ஒன்றை கூறினார். கதை சொல்லி முடித்தவுடன், எல்லா குழந்தைகளும் கோமாளியை தோளுக்குமேல் தூக்கி கொண்டாடினர்.  
    இன்றைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் பேசும்போது, கதைகள் சொல்லும்போது சொல்பவரின் கற்பனை திறன் அதிகமாகிறது. மதிப்பெண்கள் பின்னால் மாணவர்கள் ஓடாமல், வாழ்க்கைக்கு தேவையான கல்வியை புரிந்து படிக்கும் கல்வியே சிறந்தது என உணர வேண்டும். மன அழுத்தம் குறைந்து, உற்சாகம் மேலிட வேண்டும் எனில், கதைகள் படிக்க வேண்டும். ஆச்சி, தாத்தாக்களிடம் கதைகள் கேட்க வேண்டும் என்றார்.
    நூலகர் முத்துகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai