Enable Javscript for better performance
"முன்னாள் படை வீரர் சார்ந்தோர்  இணையத்தில் சான்று பெறலாம்'- Dinamani

சுடச்சுட

    

    "முன்னாள் படை வீரர் சார்ந்தோர்  இணையத்தில் சான்று பெறலாம்'

    By DIN  |   Published on : 18th May 2018 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் படை வீரர்கள் தங்கள் குழந்தைகளின் உயர் கல்வி சேர்க்கைக்கு இணையதளம் மூலம் சார்ந்தோர் சான்று பெறலாம்.
    இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் 2018-19ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக், டிப்ளமோ மற்றும் கல்லூரி சேர்க்கைக்குரிய இடஒதுக்கீட்டிற்கான சார்ந்தோர் சான்று ஆன்லைன் மூலம் வழங்கப்படவுள்ளது. அதற்கு முன்னாள் படை வீரர்களின் விவரங்கள் மின்னனு முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். 
    மின்னணு முறையில் பதிவேற்றம் செய்யாதவர்கள், முன்னாள் படை வீரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், படை விலகல் சான்று, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, வங்கி பாஸ் புத்தகம் முதல் பக்கம், ஆதார் கார்டு, குழந்தைகளின் கல்வி மாற்றுச் சான்று நகல், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், சாதிச் சான்று நகல், குடும்ப உணவு பங்கீடு அட்டை நகல் ஆகியவற்றுடன்  திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநரை அணுகலாம். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சார்ந்தோர் சான்றிதழை பயன்படுத்தக்கூடாது. இந்த ஆண்டிற்கு விண்ணப்பிக்கும்போது புதிதாக சார்ந்தோர் சான்று பெற வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai