Enable Javscript for better performance
விதிமீறும் வாகனங்கள்: ஓட்டுநர்களிடம் அபராதம் வசூலிக்க திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விதிமீறும் வாகனங்கள்: ஓட்டுநர்களிடம் அபராதம் வசூலிக்க திட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் அபராதம் வசூலிக்க  புதிய திட்டம் வெள்ளிக்கிழமை (மே 18) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
    மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் திருநெல்வேலி மாநகர போலீஸார் சம்பவ இடத்திலேயே அபராதம் வசூலித்து வருகிறார்கள்.
    இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராத பணத்தை, மின்னணு பண பரிவர்த்தனை முறையில் வசூலிக்க மாநகர காவல் ஆணையர் கபில்குமார் சராட்கர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை (மே 18) முதல் புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
    போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதத்தை வசூலிக்க போலீசாருக்கு "ஸ்வைப்பிங் மிஷின்' வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அபராத தொகையை நேரடியாக மாநகர காவல் துறையின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வாகன ஓட்டிகளுக்கு  உடனடியாக அபராத தொகைக்கான ரசீதும் வழங்கப்படும். அபராத தொகையை பணமாக செலுத்த வேண்டும் என விரும்புபவர்கள் பழைய நடைமுறையில் பணமாக செலுத்தி அபராதம் செலுத்தியதற்கான ரசீதினை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட போக்குவரத்து பிரிவு மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கு பிரிவு போலீஸ் நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai