பைக் கவிழ்ந்து அஸ்ஸாம் இளைஞர் சாவு
By DIN | Published On : 12th November 2018 08:05 AM | Last Updated : 12th November 2018 08:05 AM | அ+அ அ- |

திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அஸ்ஸாம் இளைஞர் உயிரிழந்தார்.
திசையன்விளை அருகேயுள்ள ஆயன்குளத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா. இவரது, வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நண்பரான பரத்சிங் கவுல் மகன் கோசின் கவுல் (24) ஞாயிற்றுக்கிழமை காலை ஆயன்குளம் வந்துள்ளார். பின்னர், அவர் மோட்டார் சைக்கிளில் திசையன்விளைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, ஆயன்குளம் திருப்பத்தில் எதிர்பாராமல் வாகனம் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த கோசின் கவுல் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.