நெல்லையிலிருந்து 11 புதிய பேருந்துகள்: அமைச்சர் தொடங்கிவைத்தார்

திருநெல்வேலியிலிருந்து புதிய வழித்தடத்தில் 11 பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.

திருநெல்வேலியிலிருந்து புதிய வழித்தடத்தில் 11 பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் 471 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதில், திருநெல்வேலி மாவட்டத்துக்கு 41 பேருந்துகள் வழங்கப்பட்டன. முதல் கட்டமாக 30 பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டன. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 11 புதிய பேருந்துகளை ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். 
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார். திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு 3 பேருந்துகள், திருச்செந்தூர், தென்காசி, பாபநாசம், தேனி, சிவகிரி ஆகிய ஊர்களுக்கு தலா ஒரு பேருந்து, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 2 பேருந்துகள், வள்ளியூரிலிருந்து ராமேசுவரத்துக்கு ஒரு பேருந்து என 11 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், எம்.பி. க்கள் விஜிலா சத்யானந்த், கே.ஆர்.பி. பிரபாகரன், மாநில கூட்டுறவு ஒன்றியத் துணைத் தலைவர் தச்சை ந. கணேசராஜா, கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் சுதா கே. பரமசிவன், பரணி ஏ. சங்கரலிங்கம், துணை இயக்குநர் இளங்கோவன், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com