மேலநத்தத்தில் வழிபாடு

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, மேலநத்தம் அக்னி தீர்த்த கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை புனித நீராடி வழிபட்டனர்.

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, மேலநத்தம் அக்னி தீர்த்த கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை புனித நீராடி வழிபட்டனர்.
மேலநத்தம் ஆனையப்ப சாஸ்தா குலதெய்வ கோயில் டிரஸ்ட், அக்னீஸ்வரர் கோயில் மற்றும் பொதுமக்கள் சார்பில் மேலநத்தம் தாமிரவருணி அக்னி தீர்த்த கட்டத்தில் தீர்த்தவாரி பெருவிழா கடந்த 12 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கும்ப பூஜை, ஜபம், ஹோமம் ஆகியவை தினமும் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை தாமிரவருணி நதிக்கரையில் சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகம், நதி பூஜை, தீர்த்த சங்கரஹணம், சாஸ்தா அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பால், மஞ்சள், மலர் தூவி பக்தர்கள் வழிபட்டனர். மாலையில் ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இம் மாதம் 23 ஆம் தேதி வரை தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com