செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்

செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை: செங்கோட்டையில் கடந்த வியாழக்கிழமை விநாயகர் சிலை ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி விநாயகர் திருமேனியை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் மீதும், இந்துக்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த அன்றே தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல் துறை கைது செய்யாததால், வெள்ளிக்கிழமை செங்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி., டி.ஐ.ஜி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட ஆயிரக்கணக்கான போலீஸார் முன்னிலையில் மீண்டும் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
ஆனால், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இந்துக்கள் மீது காவல் துறை தடியடி நடத்தி இருப்பது மிகுந்த வேதனைக்குரியது. 
விநாயகர் சிலை வைப்பதற்கு 24 கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் கமிட்டி பொறுப்பாளர்களை வீடுவீடாக இரவில் சென்று மிரட்டிய திருநெல்வேலி மாவட்ட காவல் துறை,  தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதன் விளைவாகவே ஊர்வலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கலவரம் செய்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அப்பாவி இந்துக்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் போக்கை காவல் துறை கைவிட வேண்டும். செங்கோட்டையில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை காவல் துறை உறுதி செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com