அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி: 316 மாணவர்கள் பங்கேற்பு

அண்ணா பிறந்தநாளையொட்டி, பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற விரைவு சைக்கிள் போட்டியில் 316 மாணவர்கள் பங்கேற்றனர்.


அண்ணா பிறந்தநாளையொட்டி, பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற விரைவு சைக்கிள் போட்டியில் 316 மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 110 ஆவது பிறந்தநாளையொட்டி, விரைவு சைக்கிள் போட்டி நடைபெற்றது. 13, 15, 17 வயது பிரிவு மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 316 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியை, அண்ணா விளையாட்டு மைதானம் அருகே மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி. உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.வி. வீரபத்ரன் முன்னிலை வகித்தார்.
13 வயது மாணவர்கள் பிரிவில் பாளையங்கோட்டை எம்.என். அப்துல்ரகுமான் பள்ளி மாணவர் எஸ். கௌதம் முதலிடமும், புனித சவேரியார் பள்ளி மாணவர் எஸ். சிவசுப்பிரமணியன் 2 ஆவது இடமும் பெற்றனர்.
மாணவிகள் பிரிவில் திருநெல்வேலி புனித ஜோசப் பள்ளி மாணவி இ. முப்புடாதி முதலிடமும், இதே பள்ளி மாணவி பி. விமலரசி 2 ஆவது இடமும் பெற்றனர். 15 வயது மாணவர் பிரிவில் புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவர் தீபக் முதலிடமும், இதே பள்ளி மாணவர் முத்துசாமி 2 ஆவது இடமும், மாணவிகள் பிரிவில் பாளையங்கோட்டை குழந்தை ஏசு பள்ளி மாணவி முத்து முதலிடமும், இதே பள்ளி மாணவி சிமிலி 2 ஆவது இடமும் பெற்றனர்.
17 வயது மாணவர் பிரிவில் எம்.என். அப்துல்ரகுமான் பள்ளி மாணவர் சிவபாண்டியன் முதலிடமும், விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யூ.ஏ. பள்ளி மாணவர் தாமோதரன் 2 வது இடமும், மாணவிகள் பிரிவில் குழந்தை ஏசு பள்ளி மாணவி சீதாலட்சுமி முதலிடமும், இதே பள்ளி மாணவி பொன்மாரி 2 ஆவது இடமும் பெற்றனர்.
பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொழிலதிபர் செல்வசிங் சான்றிதழ், பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், வாலிபால் பயிற்றுநர் வெங்கடேஷ், பயிற்றுநர்கள் சத்தியகுமார், தாசன், குமரமணிமாறன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com