திருநெல்வேலி மாநகரில் 70-க்கும் மேற்பட்ட விளம்பரப் பதாதைகள் மாநகராட்சிப் பணியாளர்களால் அகற்றப்பட்டன.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும்விதமாக கடந்த 21ஆம் தேதி ஆட்சியர் ஷில்பா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் அனுமதியில்லாத இடங்களில் விளம்பரப் பதாதைகள் வைப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் வகையில், மாநகராட்சிப் பகுதிகளில் ஏதேனும் விளம்பர பதாதைகள் வைக்கப்பட்டுள்ளதா என கடந்த 2 நாள்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி 70-க்கும் மேற்பட்ட விளம்பரப் பதாதைகள் மாநகராட்சிப் பணியாளர்களால் அகற்றப்பட்டன. உயர்நீதிமன்றம் கடந்த 19ஆம் தேதி பிறப்பித்துள்ள இடைக்கால தீர்ப்பின்படி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பதாதைகள் வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர ஆணையர் நாராயணன் நாயர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு: சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்

தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்புடன் தொடரும்: அமைச்சா் வி. காந்திராஜ்

நான் மோடியின் மிகப் பெரிய ரசிகன்! அமெரிக்க அதிபா் டிரம்ப்
கடல் சீற்றத்தால் இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவா் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


