மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு: மின் ஊழியர் அமைப்பு தீர்மானம்
By DIN | Published On : 01st April 2019 02:17 AM | Last Updated : 01st April 2019 02:17 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிப்பது என திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பு மண்டல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் மத்தியமைப்பின் மண்டல கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பின் குமரி மாவட்டத் தலைவர் குணசேகர் தலைமை வகித்தார்.
திருநெல்வேலி மாவட்ட திட்ட தலைவர் பீர்முகம்மது ஷா முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகி வை.பாலசுப்பிரமணியன் மண்டல கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
சி.ஐ.டி.யூ. மாநிலச் செயலர் ஆர்.மோகன், மின் வாரிய ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலர் ராஜாமணி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், மின்சார வாரியத்தை சீர்குலைத்து மாநில அரசின் உரிமைகளை பறித்து மின்வாரியத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு, பொதுத்துறையை பாதுகாக்க தவறிய அதிமுக அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மின் ஊழியர்கள் வாக்களித்து வெற்றி பெற செய்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பின் மாநில பொதுச் செயலர் ராஜேந்திரன் நிறைவுரையாற்றினார்.