கடையநல்லூரில் அமமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
By DIN | Published On : 04th April 2019 08:24 AM | Last Updated : 04th April 2019 08:24 AM | அ+அ அ- |

கடையநல்லூரில் அமமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவுக்கு, மாவட்டச் செயலர் பாப்புலர் முத்தையா தலைமை வகித்தார். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் கோதர்ஷா சேட், மாவட்ட விவசாய பிரிவு செயலர் பெருமையா பாண்டியன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் கமாலுதீன் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் பொய்கை மாரியப்பன் அலுவலகத்தை திறந்து வைத்தார். ஒன்றியச் செயலர் பெரியதுரை நன்றி கூறினார்.