முதல்வர் இன்று பிரசாரம்: சங்கரன்கோவிலில் அதிமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவிலில் தமிழக முதல்வர் வருகையையொட்டி அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் தமிழக முதல்வர் வருகையையொட்டி அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அதிமுக கூட்டணி தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணசாமியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
இதையொட்டி சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தலைமை வகித்தார். 
இதில், வேட்பாளர் டாக்டர்.கிருஷ்ணசாமி, மாவட்ட  எம்.ஜி.ஆர்.மன்றச் செயலர் கே.கண்ணன்,  மாவட்ட பொருளாளர் சண்முகையா,தேமுதிக மாவட்டச் செயலர் சோலைகனகராஜ், பாமக மாநிலத்துணைத் தலைவர் திருமலைக்குமாரசாமி, பாஜக மாவட்டச் செயலர் சுப்பிரமணியன், புதிய தமிழகம் மாவட்டச் செயலர் இன்பராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆறுமுகம், இ.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், அதிமுக கூட்டணியினர் உற்சாகமாக நமது அணியின்  வெற்றிக்குப் பணியாற்ற வேண்டும். அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் பணி செய்ய வேண்டும்.
இத்தேர்தலில் மேற்கொள்ளும் பணியால், உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் நிற்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும். எனவே, நமது கூட்டணியின் வெற்றிக்காக அதிமுக கூட்டணிக் கட்சியினர் உற்சாகத்தோடு பணி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வேட்பாளர் பேசியது:  என்னை ஒரு முறை தேர்ந்தெடுங்கள்.அடுத்து என்னை நீங்கள் விட மாட்டீர்கள்.அந்த அளவுக்கு நான் சிறப்பாக பணி செய்வேன். நான் அதிமுகவாக இல்லையே என எண்ண வேண்டாம். நான் அதிமுகவில் இல்லாத அதிமுக காரன்.
இப்போது நான் நிற்பது அதிமுகவில்தான்.ஜெயித்தாலும் அதிமுக உறுப்பினர் தான். உங்களில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள். அதிமுக தொண்டர்கள் அணிவகுத்து வந்தால் எதிரில் அணியே கிடையாது. இப்பகுதியின் வளர்ச்சிக்காக எனது குரல் மக்களவையில் ஒலிக்கும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com