Enable Javscript for better performance
கடையநல்லூர் அதிமுக பிரமுகர் வீடு, வாகனங்களில் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    கடையநல்லூர் அதிமுக பிரமுகர் வீடு, வாகனங்களில் சோதனை

    By DIN  |   Published on : 11th April 2019 09:28 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அதிமுக நகரச் செயலரின் வீடு மற்றும் வாகனங்களில் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
    கடையநல்லூர் அதிமுக நகரச் செயலராக இருப்பவர் கிட்டுராஜா. தேர்தலுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக இவரது வீட்டில் பணம் வைக்கப்பட்டுள்ளதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அனுபமா, சர்ச்சில் ஜெபராஜ் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினர் கிட்டுராஜா வீட்டில் இருந்து வெளியே வந்த வாகனங்களை புதன்கிழமை சோதனையிட்டனர். இதில் பணம் எதுவும் பிடிபடவில்லை என அவர்கள் தெரிவித்தனர். மேலும், அந்தத் தெரு வழியாக வந்த வாகனங்களையும் அவர்கள் சோதனையிட்டனர். அந்த வாகனங்களிலும் பணம் எதுவும் பிடிபடவில்லை.
    இதற்கிடையே, தேர்தல் அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், வருமானவரித் துறை உதவி ஆணையர் மாதவன் தலைமையிலான குழுவினர், கிட்டுராஜா வீட்டில் சுமார் ஒருமணி நேரம் சோதனை மேற்கொண்டனர். அப்போதும் பணம் எதுவும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.
    ஆளும் கட்சி நகரச் செயலர் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பிவருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp