நெல்லை கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டை கோயில்களில் ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.


தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டை கோயில்களில் ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையில் உள்ள பல்வேறு கோயில்களில் காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வீடுகளில் அதிகாலையிலேயே குளித்துவிட்டு மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட பல்வேறு கனிகளையும் படையலிட்டு கணி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். புதுமணத் தம்பதிகள் தங்களது பெயருக்கு சிறப்பு அர்ச்சனை செய்தனர்.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயில், பாளையங்கோட்டையில் உள்ள தெற்கு முத்தாரம்மன் கோயில், அரசடி விநாயகர் கோயில், செல்வவிநாயகர் கோயில், பேருந்து விநாயகர் கோயில், பேராட்சியம்மன் கோயில், ஆயிரத்தம்மன் கோயில், உச்சினிமாகாளிஅம்மன் கோயில் ஆகியவற்றிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புதிய ரூபாய் நோட்டுகளை கோயில்களில் வைத்து வழிபாடு நடத்தி எடுத்துச் சென்றனர்.
பாளையங்கோட்டையில் உள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் திருமஞ்சனம் நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சன்னியாசி கிராமம் அலமேலுமங்கை சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றன. திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில், கொக்கிரகுளத்தில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்கபெருமாள் கோயில், சி.என்.கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில், தச்சநல்லூரில் உள்ள வெங்கடாசலபதி கோயில், மேலத்திருவேங்கடநாதபுரத்தில் உள்ள வெங்கடாசலபதி கோயில் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருநெல்வேலி கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சநேயர், கனகமகாலட்சுமி கோயிலில் ஆரஞ்சு, ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளால் சுவாமிக்கு பழக்காப்பு மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com