சுடச்சுட

  

  திருநெல்வேலி சந்திப்பில் அமமுகவினர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
  திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், பேட்டையிலிருந்து தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினார். 
  தொடர்ந்து திருநெல்வேலி நகரம், பாறையடி, தச்சநல்லூர் வழியாக திருநெல்வேலி சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது அவர் பேசியது: தமிழக மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாத ஆட்சியாளர் வேண்டுமா அல்லது எதிர்ப்புகளை தாங்கி மக்கள் நலனுக்காக பாடுபடும் டிடிவி.தினகரனுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். இத்தொகுதி பிரச்னைகளை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசி தீர்வு காண முயற்சிகளை எடுப்பேன். அதற்கு பரிசுப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
  பிரசாரத்தில், மாநகர் மாவட்டச் செயலர் கல்லூர் இ.வேலாயுதம், புறநகர் மாவட்டச் செயலர் சொக்கலிங்கம்,  அவைத் தலைவர் பூ.ஜெகநாதன் என்ற கணேசன், பொருளாளர் பால்கண்ணன், பகுதிச் செயலர் பேச்சிமுத்துபாண்டியன், ராமுவெங்கடாசலம், ராம்சன் உமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai