சுடச்சுட

  

  எம்.பில்., முனைவர் பட்டப்பதிவு: சுந்தரனார் பல்கலை.யில் ஜூன் 22இல் பிற்சேர்க்கை நுழைவுத்தேர்வு

  By DIN  |   Published on : 17th April 2019 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டப் பதிவுக்கான பிற்சேர்க்கை தகுதி நுழைவுத் தேர்வு வருகிற ஜூன் 22ஆம் தேதி நடைபெறுகிறது. 
  இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டப் பதிவுக்கான பிற்சேர்க்கை தகுதி நுழைவுத் தேர்வு வருகிற ஜூன் 22ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. 
  பிற்சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  வருகிற 22ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் (w‌w‌w.‌m‌s‌u‌n‌i‌v.​a​c.‌i‌n) தெரிந்துகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai