சுடச்சுட

  

  கல்லிடைக்குறிச்சியில் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.
  அம்பாசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர்கள் கணேஷ், தட்சணாமூர்த்தி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கல்லிடைக்குறிச்சி குமார கோயில் பகுதியில், அதிமுக பேரூர் 2ஆவது வார்டு செயலரான சுடலைமுத்து மகன் முருகன் (48) வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்.
  அவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து ரூ.7,300 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai