சுடச்சுட

  

  திருநெல்வேலி நகரத்தில் திமுகவினர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
  திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியம், திருநெல்வேலி நகரம் வாகையடி முனையிலிருந்து தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சந்திப்பிள்ளையார் கோயில், நான்கு ரத வீதிகள் வழியாக அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் வாகையடிமுனையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்து அவர் பேசியது: மத்தியிலும் மாநிலத்திலும் சிறந்த ஆட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார் அவர்.
  பிரசாரத்தில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலர் ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலர் அப்துல் வஹாப்,  திருநெல்வேலி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கான்ஸ்டைன் ரவீந்திரன், எம்எல்ஏ லட்சுமணன், கிழக்கு மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் தவசிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai