வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் தயார்

வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்வது, தேர்தல் முடிந்த பின்பு சேகரித்து வாக்கு எண்ணும்

வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்வது, தேர்தல் முடிந்த பின்பு சேகரித்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லும் வாகனங்களை தயார்படுத்தும் பணிகள் காவல் துறை பாதுகாப்புடன் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. 
ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் 308, திருநெல்வேலியில் 308, பாளையங்கோட்டையில் 268, அம்பாசமுத்திரத்தில் 294, நான்குனேரியில் 299, ராதாபுரத்தில் 306, என திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 1,783 வாக்குச்சாவடிகள் உள்ளன.  தென்காசி மக்களவைத் தொகுதியின் கீழ் இதேபோல, தென்காசி மக்களவைத் தொகுதியின் கீழ் தென்காசி பேரவைத் தொகுதியில் 326, கடையநல்லூரில் 325, வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 271, சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 274 வாக்குச்சாவடிகள், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 281, ராஜபாளையத்தில் 261 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இவற்றுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேரவைத் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை தயார்படுத்தும் பணி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மினி லாரி, வேன்களில் பேரவைத் தொகுதி பெயர், எண் ஒட்டப்பட்டது. எந்தெந்தப் பகுதிகளுக்கு அந்த வாகனம் செல்கிறது என்பதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவற்றை வரிசைப்படுத்தும் பணி, வாகனத்தின் பதிவெண், உரிமையாளர் உள்ளிட்ட விவரங்கள், பாதுகாப்புக்கு அனுப்பப்பட உள்ள போலீஸ், துணை ராணுவப் படையினரின் பெயர் விவரங்கள் ஆகியவையும் பட்டியலிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com